Thursday, 18 August 2022

மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்

 அவளின் நினைவுகளின் பிடியில் என் பெருமளவு நேரத்தை தாரைவார்த்து இன்றுடன் மூன்றாண்டுகள் முடிவடைந்துவிட்டது.


இன்னும் முன்னூறு ஆண்டுகுகைக்குள் புதையுண்டாலும் விழிப்புடன் இருந்தாலும்... நினைவுகளில் பெரும்பகுதி அவள் உலாவிய காலடி சுவடுகள் மட்டுமே எஞ்சி இருக்கும்...


அருகில் இருந்தால் அணைத்தபடி...

விலகி இருந்தால் அவளை நினைத்தபடி... என இன்னும் 3 யுகங்கள் தாண்டி சொல்லும் சாபத்தை வரமாய் வாகியவனாயின் நகர்கிறேன்..